×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பூர்வகுடிகளின் வீடுகளை சூறையாடி மீட்கப்படும் வனத்துறை நிலங்கள்; தர்மபுரியில் பரபரப்பு சம்பவம்.!

பூர்வகுடிகளின் வீடுகளை சூறையாடி மீட்கப்படும் வனத்துறை நிலங்கள்; தர்மபுரியில் பரபரப்பு சம்பவம்.!

Advertisement

 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், பாலக்கோடு வனச்சரகத்தில் குடியிருந்து வரும் மீனவர்கள், பூர்வகுடிகள், விவசாயிகள் ஆகியோரை வெளியேற்றும் பணியானது நடைபெற்று வருகிறது. வனத்துறை சார்பில், அங்குள்ள பல பகுதிகளில் குடியிருந்து வரும் நபர்களை ஆக்கிரமிப்பு அகற்றுவதாக மக்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. 

ஆக்கிரமிப்பை அகற்றுவதாக அதிர்ச்சி செயல்

நேற்று மணல்திட்டு பகுதியில் வசித்து வந்த குடியிருப்பை வனத்துறை அதிகாரிகள் அகற்ற முற்பட்டனர். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட, அதிகாரிகள் நடத்திய தாக்குதலில் 2 பெண்கள், சிறுவன் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. பின் அதிகாரிகள் அங்கிருந்து செல்ல, பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். 

இதையும் படிங்க: தகாத உறவை முறித்ததால் காதலியின் குழந்தைகளை கொன்ற கள்ளக்காதலன்!

குடியிருப்பில் இருந்தவர்கள் வீட்டில் இல்லாததை அறிந்துகொண்ட வனத்துறை, இரவோடு இரவாக அங்கு சென்று வீடுகளை சூறையாடி இடித்து தள்ளி இருக்கிறது. இந்த விஷயம் குறித்து செய்திகள் வெளியான நிலையில், வனத்துறை அதிகாரிகள் தற்போது சம்பவம் குறித்து விளக்கம் அளித்து இருக்கின்றனர்.

வனத்துறை, ஆட்சியர் அலுவலகம் விளக்கம்

அதாவது, வனங்கள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ், யானை வழித்தடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது. வனத்துறை சட்டத்திற்கு உட்பட்டு மட்டுமே ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

ஐந்து தலைமுறைக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வந்த பூர்வகுடி மக்கள், தங்களுக்கு மாற்று இடம் கூட கொடுக்காமல் அதிகாரிகள் வீடுகளை சூறையாடி இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: திருமணமான பெண் மீது ஒருதலைக்காதல்; விரக்தியில் பெண்ணின் குழந்தைகளை கொலை செய்த செய்த இளைஞர்..! தர்மபுரியில் பேரதிர்ச்சி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dharmapuri #pennagaram #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story