சிகிரெட்டுக்கு பற்றவைத்த தீ இளைஞரின் உயிர்பறித்த சோகம்.. போதையிலேயே மூச்சுத்திணறி பிரிந்த உயிர்.!
சிகிரெட்டுக்கு பற்றவைத்த தீ இளைஞரின் உயிர்பறித்த சோகம்.. போதையிலேயே மூச்சுத்திணறி பிரிந்த உயிர்.!

புகை, மது பழக்கம் கட்டாயம் மரணத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கடம்பி கிராமத்தில் வசித்து வருபவர் நேதாஜி. 34 வயதாகும் நேதாஜிக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக சென்னை சாலிகிராமத்தில் தங்கியிருந்து ஐடி ஊழியயராக வேலை பார்த்து வந்துள்ளார்.
மதுபானம் குடிக்கும் பழக்கம் கொண்டவர், சம்பவத்தன்று குடித்து இருக்கிறார். பின் சிகிரெட் பிடித்து, அதன் அனலை அணைக்காமல் உறங்கி இருக்கிறார். இதனால் சிகிரெட் கங்கு மெத்தையில் பட்டு எரியத் தொடங்கி இருக்கிறது.
இதையும் படிங்க: திருவண்ணாமலை: அரசு கொடுத்த நிலத்துக்கு உரிமை கோரி தகராறு; லாரி ஏற்றி இளைஞர் படுகொலை..!
மூச்சுத்திணறி சோகம்
அதிகாலை நேரத்தில் அதிக புகை எழவே, அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு வந்து கதவை உடைத்து நேதாஜியை மீட்டனர். அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது, நேதாஜி மூச்சுத்திணறி மரணம் அடைந்தது தெரியவந்தது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கடன் தொல்லை கழுத்தை நெரித்ததால் சோகம்; 3வது மனைவியுடன் கணவர் விபரீதம்..! இருவரும் மரணம்.!