தேங்காய் பறிக்கும்போது சோகம்; மின்சாரம் தாக்கி பறிபோன உயிர்.. பதறவைக்கும் வீடியோ.!
தேங்காய் பறிக்கும்போது சோகம்; மின்சாரம் தாக்கி பறிபோன உயிர்.. பதறவைக்கும் வீடியோ.!
தென்னை மரத்தில் இருந்து தேங்காய் பறிக்கும் முயற்சியில், துரட்டி உயர் மின்னழுத்த கம்பியில் பட்டதால் உயிர் பறிபோனது.
சென்னையில் உள்ள அம்பத்தூர், சூரபட்டு பகுதியில் வசித்து வருபவர் குணசேகரன் (வயது 53). இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் இருக்கும் தென்னை மரத்தில், தேங்காய் பறித்துக்கொண்டு இருந்தார்.
மின்கம்பியில் பட்டதால் பகீர்
இரும்பு கம்பியுடன் இணைக்கப்பட்ட துரட்டியை கொண்டு தேங்காய் பறித்ததாக தெரியவருகிறது. அப்போது, அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பியின் மீது துரட்டி பட்டுள்ளது.
இதையும் படிங்க: 21 வயது மருத்துவக்கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்: பரோட்டா சாப்பிட்டு உறங்கியவர் மரணம்..!
மின்சாரம் பாய்ந்து சோகம்
இதில் குணசேகரனின் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில், அவர் வீட்டின் மேல் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தபோது, அங்கு மரணம் உறுதி செய்யப்பட்டது.
காவல்துறை விசாரணை
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த அம்பத்தூர் காவல்துறைனர், குணசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் குணசேகரன் கூலித்தொழிலாளி எனவும், அவர் வேறொருவரின் வீட்டில், தேங்காய் இறக்கித்தரச் சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி நிலவரங்கள் சேகரிக்கப்படுகிறது.
பதறவைக்கும் காட்சி இங்கே
இதையும் படிங்க: சிவகங்கை: பசு மீது விழுந்த மின்சார கம்பி; காப்பாற்ற முயன்ற பெண் பலி.!