ரூ.5 கோடி கடனுக்கு தவணை மாதம் ரூ.6 இலட்சம்.. கடன் தொல்லையால் தம்பதி விபரீதம்.. குடும்பமே மரணம்.!
ரூ.5 கோடி கடனுக்கு தவணை மாதம் ரூ.6 இலட்சம்.. கடன் தொல்லையால் தம்பதி விபரீதம்.. குடும்பமே மரணம்.!

சென்னையில் உள்ள அண்ணா நகர், மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாலமுருகன். இவரின் மனைவி சுமதி. மருத்துவரான பாலமுருகன் ஸ்கேன் சென்டர் ஒன்றையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஒரு கிளை வைத்திருந்த பாலமுருகன், கடன் வாங்கி ஸ்கேன் சென்டர்களை விரிவுபடுத்த நினைத்துள்ளார். இதனால் வங்கியில் ரூ.5 கோடி வரை கடன் வாங்கியதாக தெரியவருகிறது. கடனுக்காக மாத தவணையாக ரூ.6 இலட்சம் வரை செலுத்த வேண்டும் என ஒப்பந்தமிடப்பட்டுள்ளது.
4 பேர் சடலமாக மீட்பு
இதனிடையே, ஸ்கேன் சென்டரில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காத காரணத்தால், தம்பதிகள் கடனுக்கான நிலுவையை செலுத்த இயலாமல் தவிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். கடந்த 10 நாட்களாக குடும்பத்தினரிடம் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை: லிப்டில் ஊழியருக்கு காத்திருந்த எமன்; உடல் நசுங்கி இளைஞர் மரணம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
உறவினர்கள் சிலரிடம் கடன் வாங்கி தவணை தொகையில் பகுதியை செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தம்பதிகள் இருவரும், அவர்களது 2 மகன்களுடன் இன்று சடலமாக மீட்கப்பட்டனர். அவர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டது உறுதியான நிலையில், காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: லாரி சக்கரத்தில் சிக்கி 51 வயது பெண் பரிதாப பலி.!