இருசக்கர வாகனம் வாங்கிக்கொடுக்காததால் ஆத்திரம்; 19 வயது இளைஞர் தீக்குளித்து தற்கொலை.. சென்னையில் சோகம்.!
இருசக்கர வாகனம் வாங்கிக்கொடுக்காததால் ஆத்திரம்; 19 வயது இளைஞர் தீக்குளித்து தற்கொலை.. சென்னையில் சோகம்.!

சென்னையில் உள்ள மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் முருகன் (வயது 42). இவர் கட்டிட கழிவு தரப்பிரிவு வேலையில் இருக்கிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார்.
தம்பதிகளுக்கு 19 வயதுடைய ஜீவா என்ற மகன் இருக்கிறார். இவர் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இதனிடையே, ஜீவா தனது தந்தையிடம், தனக்கு இருசக்கர வாகனம் வேண்டும் என கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னை: ஆக்ஸலை முறுக்கிய சிறுமி தலை நசுங்கி பலி.. இருசக்கர வாகனத்தில் தாத்தாவுடன் வந்த பேத்திக்கு நேர்ந்த சோகம்.!
இருசக்கர வாகனம் கேட்டு அடம்
இருசக்கர வாகனம் தராத முருகன், மகனை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார். இதனால் வருத்தத்தில் இருந்த ஜீவா, கடந்த 2 நாட்களுக்கு முன், முருகன் தற்போது வேலை செய்து வரும் இடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தின் குடிநீர் பாட்டிலில் பெட்ரோலை பிடித்து, தனது உடலில் ஊற்றிக்கொண்டு இரட்டை இருக்கிறார். இதனையும் முருகன் கண்டுகொள்ளவில்லை.
தீக்குளித்து தற்கொலை
இதனால் அங்கு குளிர்காய மூட்டி வைக்கப்பட்டு இருந்த நெருப்பை அவர் தன்மீது போட்டுக்கொண்டார். இதனால் உடலில் தீப்பற்றி எரிந்து ஜீவா படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து, உடனடியாக ஜீவாவை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமாகி செய்த நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மதுரவாயல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை: 25 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்; நண்பர்களின் வெற்றியை கொண்டாடிய அடுத்த கணமே மரணம்..!