போதை ஆசாமியை ஆவேசத்தில் தள்ளிவிட்டு கொலை வழக்கில் சிக்கிய 23 வயது இளைஞன்; பல்லாவரத்தில் அதிர்ச்சி.! i
போதை ஆசாமியை ஆவேசத்தில் தள்ளிவிட்டு கொலை வழக்கில் சிக்கிய 23 வயது இளைஞன்; பல்லாவரத்தில் அதிர்ச்சி.! i

போதையின் பாதை தன்னை உட்கொள்பவனை மட்டுமல்லாது, அப்பாவியின் வாழ்க்கையையும் சேர்ந்து சீரழிகிறது.
சென்னையில் உள்ள பல்லாவரம், பம்மல், பசும்பொன் நகர், சக்கரபாணி தெருவில் வசித்து வருபவர் இருதயராஜ் (வயது 50). இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
குடிப்பழக்கம் கொண்டவர், மார்ச் 13 அன்று போதையில் இருந்துள்ளார். இதே பகுதியில் அசித்து வருபவர் டென் பிரவீன் (23). இவர்கள் இருவருக்கும் இடையே மார்ச் 13 அன்று தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விவகாரம்; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.. "திமுக உறுப்பினர் வெற்றி செல்லும்" - அறிவிப்பு.!
இந்த தகராறில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி, இருவரும் ஒருவரையொருவர் தாக்கி இருக்கின்றனர். அச்சமயம், பிரவீன் ஆத்திரத்தில் இருதயராஜை பிரவீன் கீழே தள்ளி இருக்கிறார்.
இந்த சம்பவத்தில் தலையில் படுகாயமடைந்த இருதயராஜ், அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
குரோம்பேட்டை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விஷயம் குறித்து சங்கர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காதலி கொலைக்கு பழிவாங்க ஸ்கெட் போட்ட காதலன்; முந்திக்கொண்ட ரௌடி.. 2 பேர் சரமாரி வெட்டிக்கொலை.!