குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம்; 13 பேருக்கு சிறுநீரக பாதிப்பு.. மருத்துவமனையில் சிகிச்சை.!
குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம்; 13 பேருக்கு சிறுநீரக பாதிப்பு.. மருத்துவமனையில் சிகிச்சை.!
சென்னையில் உள்ள பல்லாவரம் மற்றும் கண்டோன்மெண்ட் பகுதியில், கழிவுநீரில் குடிநீர் கலந்ததாக புகார் எழுந்தது. மேலும், இந்த நீரை பருகிய 3 பேர் அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு மரணமடைந்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அங்குள்ள மக்களுக்கு மருத்துவ முகாம் வாயிலாக பரிசோதனை நடத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: 21 வயது கல்லூரி மாணவி 10 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம்.. ஸ்னாப்சாட் பழக்கம், விடுதிவிடுதியாக கொடூரம்.!
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், மொத்தமாக 41 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 13 பேருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களால் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
ஆய்வு முடிவுக்காக காத்திருப்பு
நீரின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வரும் பட்சத்திலேயே, நீரில் கலந்துள்ள நச்சுக்களின் அளவு தெரியவரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவமனைவியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டுள்ள அனைவர்க்கும், உயரிய சிகிச்சை வழங்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தேங்காய் பறிக்கும்போது சோகம்; மின்சாரம் தாக்கி பறிபோன உயிர்.. பதறவைக்கும் வீடியோ.!