×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாம்பரம்: "ஹலோ போலிஸ்., என் பொண்டாட்டிய கொன்னுட்டேன்" - மனைவியை கொன்று அதிர்ச்சி தந்த கணவன்..!

தாம்பரம்: ஹலோ போலிஸ்., என் பொண்டாட்டிய கொன்னுட்டேன் - மனைவியை கொன்று அதிர்ச்சி தந்த கணவன்..!

Advertisement

மனைவியை கொலை செய்த கணவர், காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு விபரத்தை தெரிவித்து சரணடைந்த அதிர்ச்சி சம்பவம் தாம்பரத்தில் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம், தாய் மூகாம்பிகை நகரில் வசித்து வருபவர் கோபால் ராஜ் (வயது 35). இதே பகுதியில் கோபாலராஜ் பழைய இரும்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் மனைவி பரமேஸ்வரி (வயது 29). 

நடத்தை சந்தேகம்

தம்பதிகளுக்கு ஒரு மகன், மகள் இருக்கின்றனர். இதனிடையே, பரமேஸ்வரியின் நடத்தையில் கோபாலுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது மதுபானம் அருந்திவிட்டு வருபவர், தகராறிலும் ஈடுபட்டு இருக்கிறார். 

இதையும் படிங்க: காதலியை நண்பனுக்கு விருந்தாகிய ரவுடி.. கொலையில் முடிந்த கள்ள உறவு.!! அதிர்ச்சி பின்னணி.!!

கழுத்தறுத்து கொலை

கடந்த வெள்ளிக்கிழமை இரவு நேரத்திலும் போதையில் வீட்டிற்கு வந்தவர், மனைவி பரமேஸ்வரியிடம் தகராறு செய்துள்ளார். அச்சமயம் ஆத்திரமடைந்த கோபால்ராஜ், மனைவியின் கழுத்தை அறுத்துக்கொலை செய்தார். பின் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு விபரத்தை தெரிவித்துள்ளார். 

காவல்துறையினர் விசாரணை

பின் அங்கிருந்து மணிமங்கலம் காவல் நிலையம் சென்றவர், தகவலை கூறி சரண் அடைந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பரமேஸ்வரியின் வீட்டிற்குச் சென்று, அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கோபாலராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுக்கு முன்பு தம்பதிகளுக்கு நடைபெற்று முடிந்த நிலையில், பரமேஸ்வரிக்கு சிலருடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரியவருகிறது. இதனால் மனைவியின் செயல்பாடுகளை கண்டித்தும் கேட்காததால் கொலை சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இதையும் படிங்க: கணவனை இழந்த கைம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்று தானும் தற்கொலை.. விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #Tambaram #husband killed wife #தாம்பரம் #Control Room
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story