உல்லாசத்துக்குத்தான் நீ., குடும்பத்துக்கு அவ.. கள்ளக்காதலியை திருமணம் செய்ய மறுத்த நபர்.. பெண் குமுறல்.!
உல்லாசத்துக்குத்தான் நீ., குடும்பத்துக்கு அவ.. கள்ளக்காதலியை திருமணம் செய்ய மறுத்த நபர்.. பெண் குமுறல்.!
கிளப் டான்சர் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி அத்துமீறிய கள்ளக்காதலன், திருமணத்திற்கு மறுத்தால் பெண் போதையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவல் நிலைய வளாகத்தில் அரங்கேறியது.
சென்னையில் உள்ள வடபழனி காவல் நிலையத்தில், நேற்று நள்ளிரவு 1 மணியளவில் 35 வயதுடைய பெண்மணி வருகை தந்தார். போதையில் இருந்த பெண் அதிகாரிகளிடம், எனது ஆண் நண்பர் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து உல்லாசமாக இருந்து, இப்போது என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொலை மிரட்டல்; சென்னையில் பயங்கரம்.!
தற்கொலை முயற்சி
இரவு நேர பணியில் இருந்த பெண் காவலர் ஆர்த்தி, பெண்ணை காலையில் வந்து எழுத்துப்பூர்வ புகார் அளிக்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளார். போதையில் இருந்த பெண்ணோ, இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றிக்கொண்டு, தனக்கு நியாயம் வேண்டும் என தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதனால் அதிர்ந்துபோன பெண் காவலர், பெண்ணின் மீது தண்ணீரை ஊற்றி அவரை மீட்டர். பின் எம்.ஜி.ஆர் நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அம்முவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த அதிகாரி, பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார்.
கள்ளக்காதல் விவகாரம்
விசாரணையில், பெண்மணி வடபழனியில் உள்ள வெங்கடேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் முடிந்து கணவர் இருக்கிறார். டான்சராக வேலை பார்த்து வருகிறார். தற்போது இரவு நேர கிளப்பில், டான்சராக வேலை பார்க்கிறார்.
பெண்ணுக்கு வடபழனியில் உள்ள அழகிரி நகரி, மூன்றாவது தெருவில் வசித்து வரும் கேட்டரிங் பணியாளர் அறிவழகன் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அறிவழகனுக்கும் திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். இருவரும் முறைதவறிய உறவில் இருந்து வந்த நிலையில், அறிவழகன் பெண்ணை திருமணம் செய்ததாக வாக்குறுதி அளித்து உல்லாசம் அனுபவித்து இருக்கிறார்.
உல்லாசத்துக்கு நீ, குடும்பம் நடத்த அவ..
சமீபத்தில் பெண் திருமணம் குறித்து கேட்க, அறிவழகன் எனது மனைவியை விட்டுவிட்டு உன்னை திருமணம் செய்யமாட்டேன். நாம் எப்போதும்போல தனிமையில் சந்திக்கலாம் என கூறவே, இருவருக்கும் வாக்குவாதம் உண்டாகி இருக்கிறது. இருவரும் சம்பவத்தன்று இரவில் இருவரும் சந்தித்து மது அருந்தியபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்பின்னரே அவர் காவல் நிலையம் வந்து தற்கொலைக்கு முயன்றது அம்பலமானது.
விசாரணையை முன்னெடுத்த காவல்துறையினர், பெண்ணின் கணவர், கள்ளக்காதலன் அறிவழகன் ஆகியோரை நேரில் வரவழைத்து ஆலோசனை கூறி அனுப்பி வைத்தனர். மேலும், மேற்படி வேண்டும் என்றால், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புத்தாண்டு கோலம் மீது வண்டி ஓட்டியவருக்கு அரிவாள் வெட்டு.. சென்னையில் பகீர்.!