சிக்கன் ஸ்டைப் வித் மயோனைஸ் சாப்பிட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. 30 நாட்களாக பரிதவித்த துயரம்..!
சிக்கன் ஸ்டைப் வித் மயோனைஸ் சாப்பிட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. 30 நாட்களாக பரிதவித்த துயரம்..!

தரமான உணவு வழங்காத நிறுவனத்தால், பெண் கடுமையான உடல்நலக்குறைவை எதிர்கொண்ட நிலையில், உரிய புகார் அளித்ததால் விசாரணைக்கு பின்னர் அவருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் கார்த்திகா. இவர் தற்போது கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருக்கிறார். கடந்த மே 6, 2024 அன்று, இரவு சுமார் 9 மணியளவில், தனது நண்பர்களுடன் காந்திபுரம் கேஎப்சி கடைக்கு சென்றுள்ளனர்.
அங்கு சிக்கன் ஸ்டைப் வித் மயோனைஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அதனை சாப்பிட்ட ஒருமணிநேரத்தில் வயிற்று உபாதைகளை எதிர்கொண்ட பெண்மணி, மறுநாள் கடுமையான தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கை எதிர்கொண்டு இருக்கிறார். இதனையடுத்து, உள்ளூரில் இருக்கும் மருத்துவமணையில் அனுமதி செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: டேட்டிங் செயலியால் விபரீதம்.. கோவை சிறுமி 7 கல்லூரி மாணவர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பகீர் பின்னணி.!
ஓராண்டு கழித்து தீர்ப்பு
மொத்தமாக மருத்துவமனையில் 1 வாரம், வீட்டில் 3 வாரம் என 4 வாரங்கள் அவர் உடல் உபாதையை எதிர்கொண்டுள்ளார். கார்த்திகா புதிதாக தொழில் தொடங்கவிருந்தபோது, கெட்டுப்போன சிக்கன் சாப்பிட்டு உடல் நலப்பிரச்சனையை எதிர்கொண்டார். இதுதொடர்பாக அவர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கவே, விசாரணை நடத்தி தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கார்த்திகாவுக்கு சரியான உணவு வழங்காத குற்றத்திற்கு ரூ.5000 மற்றும் மருத்துவ செலவுகளுக்காக ரூ.5000 என ரூ.10000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரூ.350 மதிப்புள்ள உணவை சரிவர வழங்காத கேஎப்சி நிர்வாகம், பெண்ணின் உயிருக்கு உலை வைப்பதைப்போல செயல்பட்டு, இறுதியில் ரூ.10000 அபராதம் செலுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: நெஞ்சமெல்லாம் பதறுதே.. 17 வயது சிறுமி 7 கல்லூரி மாணவர்களால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; கோவையில் பதறவைக்கும் கொடுமை..!