கோவை: 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; ஆபாச படம் பார்த்து 4 சிறார்கள் அதிர்ச்சி செயல்.!
கோவை: 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; ஆபாச படம் பார்த்து 4 சிறார்கள் அதிர்ச்சி செயல்.!
பொள்ளச்சியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை அடுத்துள்ள கிராமம் ஒன்றில், 9 மற்றும் 10 வயதுடைய மாணவிகள் 2 பேர், அங்குள்ள அரசுப்பள்ளியில் பயின்று வருகிறார்கள். இந்த ஊரில் 13 மற்றும் 16 வயதுடைய 4 சிறார்கள் வசித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: கோவை: நள்ளிரவில் பெண்களை துரத்திய போதை இளைஞர்; பணி முடித்து வந்தபோது பகீர்..!
இவர்கள் அனைவரும் மேற்கூறிய மாணவிகளின் உறவினர்கள் ஆவார்கள். சிறார்கள் என்பதால், அவ்வப்போது இவர்கள் ஒன்றாக விளையாடுவது இயல்பு. இந்நிலையில், 4 மாணவர்கள் சேர்ந்து, 2 மாணவிகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
கடந்த சில மாதமாகவே இவ்வாறான செயல் தொடர்ந்து இருக்கிறது. ஒருகட்டத்தில் மாணவிகளுக்கு நேர்ந்த விஷயம் பெற்றோருக்கு தெரியவரவே, குழந்தைகள் நலத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 4 சிறார்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணியில் இவர்கள் நால்வரும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தபோது, செல்போனில் ஆபாச படத்தை பார்த்து வந்துள்ளனர். பின் அரையாண்டு தேர்வு விடுமுறையில், ஆபாச படத்தில் வருவதைப்போல நடக்க வேண்டும் என மாணவிகளை அழைத்து பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளனர்.
விசாரணையைத் தொடர்ந்து உண்மையை அறிந்த அதிகாரிகள், 4 சிறார்களையும் போக்ஸோவில் கைது சிரித்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: கோவை: 14 வயது சிறுமி பலாத்காரம் & கருக்கலைப்பு.. ஆட்டோ ஓட்டுனரின் அதிர்ச்சி செயல்..! பள்ளிக்கு ஆட்டோவில் மகளை அனுப்பும் பெற்றோரே கவனம்.!