பாலத்தில் ஜெட் போல பயங்கர வேகம்.. நொடியில் நடந்த சம்பவத்தால் 5 பேர் படுகாயம்.. பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.!
பாலத்தில் ஜெட் போல பயங்கர வேகம்.. நொடியில் நடந்த சம்பவத்தால் 5 பேர் படுகாயம்.. பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டியில், பண்ருட்டி - கும்பகோணம் நெடுஞ்சாலையில், மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த மேம்பாலத்தில் சம்பவத்தன்று கார் ஒன்று அதிவேகத்தில் வந்தது.
வளைவான பாலத்தில் வேகமாக வந்த கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கிக்கொண்டு பக்கவாட்டு திசையில் பயணித்தது. அப்போது, எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தனர்.
இதையும் படிங்க: கர்ப்பமாக்கி கைவிட்ட காதலன்.. அன்னையை தேடி ஓடி விபரீத முடிவெடுத்த இளம்பெண்.. கண்ணீரில் உறவினர்கள்.!
கார் - இருசக்கர வாகனம் மோதி விபத்து
அவர்களின் வாகனத்தை மோதிய கார், சாலைத்தடுப்பில் மோதி சிக்கிக்கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் படுகாயம் அடைந்தனர்.
மேலும், இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் லேசான காயத்துடன் உயிர்தப்பிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, விபத்து சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. வளைவான பாலத்தில் இவ்வுளவு வேகம் தேவைதானா? என கேள்வி எழுப்பும் வகையில் விபத்து நடந்தது.
வீடியோ நன்றிபாலிமர் தொலைக்காட்சி
இதையும் படிங்க: கடப்பாரையுடன் சென்று வரியை வசூல் செய்யும் கடலூர் மாநகராட்சி.. பதறும் மக்கள்.!