#JustIN: கணவன் - மனைவி தகராறில் கொடூரம்.. குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை.. உறவினர்கள் கண்ணீர்.!
#JustIN: கணவன் - மனைவி தகராறில் கொடூரம்.. குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை.. உறவினர்கள் கண்ணீர்.!
தம்பதிகள் தகராறில் தாய் குழந்தைகளை கொலை செய்து தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர், மாளிகைமேடு கிராமத்தில் வசித்து வருபவர் அன்பழகன். இவரின் மனைவி நித்யா. தம்பதிகளுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவருக்கும் ஜோதிகா என்ற 2 வயது மகளும், சதிஷ் என்ற 5 வயது மகனும் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: விசாரணைக்கு தொடர்புகொண்ட பெண் காவலருக்கு பாலியல் தொல்லை; ஜேசிபி உரிமையாளர் கைது..!
கருத்து வேறுபாடு
இதனிடையே, தம்பதிகளுக்கு இடையே கடந்த சில மாதமாகவே கருத்து வேறுபாடு நிலவியதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், இன்றும் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளுடன் தற்கொலை
இதனால் மனவேதனையடைந்த நித்யா, இன்று கிணற்றில் தனது 2 குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், நித்யா, சதிஷ், ஜோதிகா ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர் சந்தேகத்தின் பேரில் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: Trending Video: கடலில் இருந்து நீரை உறிஞ்சும் பெஞ்சல் புயல்; மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ.!