குடும்ப கஷ்டத்தால் செயின் பறிப்பு.. இளைஞரின் அதிர்ச்சி செயல்.. மன்னிப்பு கடிதமும் சேர்ந்து சிக்கியது.!
குடும்ப கஷ்டத்தால் செயின் பறிப்பு.. இளைஞரின் அதிர்ச்சி செயல்.. மன்னிப்பு கடிதமும் சேர்ந்து சிக்கியது.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், குறிஞ்சி நகரில் வசித்து வருபவர் பழனியப்பன். இவர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஆவார். பழனியப்பனின் மனைவி சிவானந்தம் (வயது 68). மார்ச் 16 அன்று பழனியப்பன் நடைப்பயிற்சி சென்றபோது, சிவானந்தம் வீட்டில் தனியே இருந்தார். அச்சமயம் வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்த இளைஞர், சிவானந்தத்தின் ஒன்றேகால் சவரன் தங்க செயினை பறித்துச் சென்றார்.
மேலும், காதில் இருந்த கம்மல் செயலின் சிக்க, சிவானந்தத்தின் காது அறுந்து ரத்தம் ஓடியது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சிவானந்தத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை மாவு செய்தபோது, வேடசந்தூர், குஞ்சுவீரன்பட்டி பகுத்தியில் வசித்து வரும் சக்திவேல் (28) என்பவர் கைது செய்யப்பட்டார்.
திருட்டு வழக்கில் கைது
விசாரணையில், டிப்ளோமா வரை பயின்றுள்ள சக்திவேல், வேடசந்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் நூற்பாலையில் வேலை பார்க்கிறார். கடன், குடும்பத்தின் கஷ்டம் போன்ற காரணத்தால் முதல் முறை செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு, பின் அவர் சிக்கிக்கொண்டது தெரியவந்தது. மேலும், குற்றவுணர்ச்சி தாளாது தன்னை மன்னிக்க வேண்டியும், நிதிப்ரச்னை காரணமாக இவ்வாறான செயலில் ஈடுபட்டதாகவும் கடிதமும் எழுதி வைத்துள்ளார். மூதாட்டி காது அறுபட்டு குத்தியதால் பயத்தில் கடிதத்திலும் அவர் மூதாட்டியிடம் கொடுக்காமல் வந்து, பின் கைதாகி இருக்கிறார்.
இதையும் படிங்க: சின்னாளப்பட்டி: திருவிழாவுக்கு சென்ற 8 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; இளைஞர் கைது.!
இதையும் படிங்க: திண்டுக்கல் சுங்கச்சாவடி சூறையாடல் விவகாரம்; பொதுமக்கள், விவசாயிகள் என 300 பேர் மீது திருட்டு., + வழக்குப்பதிவு.!