×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திண்டுக்கல்: கழன்று ஓடிய சக்கரம்.. தறிகெட்டு பாய்ந்த கார்.. 2 பேர் பலி., 3 குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயம்.!

திண்டுக்கல்: கழன்று ஓடிய சக்கரம்.. தறிகெட்டு பாய்ந்த கார்.. 2 பேர் பலி., 3 குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயம்.!

Advertisement

கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மிதுனராஜ். இவர் தனியார் நிதிநிறுவனத்தில், முக்கிய பொறுப்பில் வேலை பார்த்து வருகிறார். தற்போது அவர் பணிமாறுதல் பெற்று, திருச்சியில் வேலைக்கு பணியமர்த்தப்பட்டுள்ளார். 

மேம்பாலத்தில் காத்திருந்த சோகம்

இதனால் கோழிக்கோட்டில் இருந்து திருச்சி நோக்கி வாகனம் ஒன்றில் தனது குடும்பத்தினர், நண்பர்களின் குடும்பத்தினர் என 9 க்கும் மேற்பட்டோருடன் சென்றுகொண்டு இருந்தார். இவர்களின் வாகனம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம், புதுப்பட்டி - குமரப்பட்டி இடையே மேம்பாலத்தில் சென்றுகொண்டு இருந்தது.

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; தந்தை-மகன் பரிதாப பலி.!

டயர் கழன்று ஓடியது

அச்சமயம், காரின் இடதுபுற பின்பக்க டயர் திடீரென கழன்று தனியே ஓடியது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 3 குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். 

காவல்துறையினர் விசாரணை

விபத்தைக்கண்டு அதிர்ந்துபோன உள்ளூர் மக்கள், விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தோரின் உடலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கும், படுகாயத்துடன் உயிருக்கு போராடியோரை மீட்டு மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து நத்தம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: #JustIN: இருசக்கர வாகனத்தின் மீது உரசிய லாரி.. நிலைதடுமாறி விழுந்ததில் கணவர் கண்முன் மனைவி பலி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #திண்டுக்கல் #Road accident #Dindigul #KERALA
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story