சாகசத்தால் சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்.. கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம்.!
சாகசத்தால் சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்.. கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம்.!

சாலை விபத்தில் 17 வயதுடைய சிறார்கள் இரண்டு பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் வசித்து வருபவர்கள் மோகன்ராஜ், ஹரிஷ்.
இவர்கள் இருவரும் தங்களின் இருசக்கர வாகனத்தில், வேகமாக செல்வதை வாடிக்கையாக கொண்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இன்று இருவரும் கள்ளக்குறிச்சி - திருக்கோவிலூர் சாலையில் சென்றபோது விபத்தில் சிக்கி இருக்கின்றனர்.
விபத்தில் சிக்கி இருவரும் பலி
இந்த விபத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், விபத்தில் சிக்கி உயிரிழந்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: போதை பழக்கத்தை தட்டிக்கேட்டதால் ஆவேசம்; மனைவிக்கு கழுத்தில் வெட்டு.!
அதிவேகமாக சென்றபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, இருவரும் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #Breaking: கள்ளக்குறிச்சியில் கணவரை இழந்த கைம்பெண் பலாத்காரம், கொலை.. குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்.!