Kanyakumari: மகனை வீட்டுக்கு அழைத்துச்சென்ற தாய்க்கு நேர்ந்த சோகம்.. போதை கார் ஓட்டுனரால் தாயை இழந்து தவிக்கும் துயரம்.!
Kanyakumari: மகனை வீட்டுக்கு அழைத்துச்சென்ற தாய்க்கு நேர்ந்த சோகம்.. போதை கார் ஓட்டுனரால் தாயை இழந்து தவிக்கும் துயரம்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல், மிடலக்காடு பகுதியில் வசித்து வருபவர் ஸ்டீபன் (வயது 38). இவர் தற்போது சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். ஸ்டீபனின் மனைவி மேரி சுஜா. தம்பதிகளுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது.
தம்பதிகளின் மகன் அங்குள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். மகனை தினமும் சுஜா பள்ளிக்கு தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, பின் மீண்டும் அழைத்து வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் சுஜா தனது மகனை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.
இதையும் படிங்க: கார் - வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 4 பேர் பரிதாப பலி.!
விபத்தில் நேர்ந்த சோகம்
அப்போது, தறிகெட்ட வேகத்தில் வந்த கார், சுஜாவின் வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சுஜா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சுஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், அவரின் மகன் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், போதையில் வாகனத்தை இயக்கிய வெட்டிவிளை பகுதியை சேர்ந்த அஜித் லிபின் என்ற 28 வயது நபரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டை: 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி சோகம்; 3 பேர் பலி.!