கார் - வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 4 பேர் பரிதாப பலி.!
கார் - வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 4 பேர் பரிதாப பலி.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம், திருச்சி - காரைக்குடி சாலையில், காரைக்குடி நோக்கி கார் ஒன்று பயணம் செய்தது. அதே நேரத்தில், காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி மினி வேன் ஒன்று பயணம் செய்தது.
இரண்டு வாகனமும் நமனசமுத்திரம் பகுஹையில் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கணவன் - மனைவி என இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பெண், இரண்டு குழந்தைகள் என இருவர் படுகாயம் அடைந்தனர். .
இதையும் படிங்க: புதுக்கோட்டை: 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி சோகம்; 3 பேர் பலி.!
4 பேர் மரணம்
டாடா எஸ் வாகனத்தில் பயணம் செய்த ஓட்டுநர் காயமடைந்த நிலையில், ஓட்டுனருடன் பயணம் செய்தவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். நிகழ்விடத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதியான ரம்யா (வயது 36) பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், விபத்தில் உயிரிழந்தது செந்தமிழ்செல்வன் (65), அருணா (60), சுதாகர் (39) என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: முன்விரோதத்தில் பயங்கரம்.. தலை துண்டித்து கொடூர கொலை.. 2 பேர் வெறிச்செயல்.!