ரூ.150 பணத்துக்காக மளிகைக்கடை உரிமையாளர் எரித்துக்கொலை.. கல்லால் தாக்கி கொன்று பயங்கரம்.!
ரூ.150 பணத்துக்காக மளிகைக்கடை உரிமையாளர் எரித்துக்கொலை.. கல்லால் தாக்கி கொன்று பயங்கரம்.!

வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்த மளிகைக்கடை உரிமையாளர் எரித்துக்கொலை செய்யப்பட்ட பயங்கரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், வைத்தியநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் வேலு (வயது 45). இவர் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று, இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்த வேலு, இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து, உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையும் படிங்க: Kanyakumari: மகனை வீட்டுக்கு அழைத்துச்சென்ற தாய்க்கு நேர்ந்த சோகம்.. போதை கார் ஓட்டுனரால் தாயை இழந்து தவிக்கும் துயரம்.!
குற்றவாளி கைது
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 5 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். அங்கிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தபோது, சுமன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில், வேலுவின் கொலையில் உள்ள அதிர்ச்சி மர்மம் விலகியது. அதாவது, சம்பவத்தன்று இரவில் வேலு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.
போதையில் கொடூரம்
அப்போது, கஞ்சா போதையில் இருந்த 24 வயதுடைய சுமன், வேலுவை இடைமறித்து பணம் கேட்டுள்ளார். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுமன், வேலுவை கல்லால் தாக்கி கொலை செய்தார். பின் அவரின் சட்டைப்பையில் இருந்த ரூ.150 பணம் எடுத்து, அதில் ரூ.50 க்கு பெட்ரோல் வாங்கி வந்து, வேலுவின் உடலை எரித்துள்ளார்.
எலும்பு முறிவு
ஏற்கனவே நண்பர் ஒருவரை கொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்ற சுமன், பிணையில் வெளியே வந்து போதையில் மற்றொரு கொலையை செய்துள்ளார். அவரை கைது செய்ய சென்றபோது, சுமன் தப்பியோடி தவறி விழுந்ததில் கை-கால் பகுதியில் எழும்பு முறிவு ஏற்பட்டது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விவேக் எக்ஸ்பிரஸ் இரயில் எஞ்சின் பைலட் மாரடைப்பால் மரணம்; பணியின்போது நேர்ந்த சோகம்.!