போலி படிப்பு சான்றிதழ் தயாரித்து ஹைடெக் விபச்சாரம்; குமரியில் அதிரடி காட்டிய போலீஸ்.!
போலி படிப்பு சான்றிதழ் தயாரித்து ஹைடெக் விபச்சாரம்; குமரியில் அதிரடி காட்டிய போலீஸ்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில், விபச்சாரம் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் அங்குள்ள மசாஜ் சென்டர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் மசாஜ் சென்டரில் இருந்த பெண்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில், பெண்களுக்கு வேலை வழங்குவதாக கூறி அழைத்து வந்து பாலியல் தொழிலில் மசாஜ் சென்டர் பெயரில் ஈடுபட வைத்தது தெரியவந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி மசாஜ் சென்டர் நடத்த பயிற்சி முடித்த சந்திரிகள், கல்வி அங்கீகாரம் போன்றவை தற்போது தேவை ஆகும்.
கடந்த 2 வாரத்துக்குள் குமாரி, நாகர்கோவில், சுசீந்திரம் பகுதியில் 30 க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டரில் சோதனை நடத்தி, 15 பெண்கள் மீட்கப்பட்டனர். இதனிடையே, போலியான மசாஜ் பயிற்சி சான்றிதழ்களை தயாரித்து மோசடி செயல் நடந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட கல்வி இருவனத்தில் பயிற்சி பெற்றதாக ஆவணங்கள் தயாரித்து வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சரின் கார் மீது மோதி சோகம்; இருசக்கர வாகன ஓட்டி பலி.!
காப்பகத்திற்கு அனுப்பி வைப்பு
பணியில் இருந்த பெண்கள் 5 ம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு மட்டுமே பயின்றுள்ள நிலையில், அவர்களை திட்டமிட்டு பாலியல் தொழிலில் கும்பல் ஈடுபடுத்தியது அம்பலமானது. பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவைகள் சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர்கள். புரோக்கர் உதவியுடன் குமரிக்கு வந்ததும் தெரியவந்தது. இதன் பின்னணியில் இருப்போர் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை, வாடிக்கையாருக்கு நுழைவுக்கட்டணம் ரூ.1000, பெண்ணுடன் தனிமையில் இருக்க ரூ.1000 என ரகரகமாக ஹைடெக் முறையில் விபச்சாரம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: திடீரென திரும்பிய கார்.. பயணிகளின் உயிரை காப்பாற்றிய டெம்போ ஓட்டுநர்.. திக்., திக் நிமிடத்திலும், ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு.!