பேருந்து நிறுத்தத்தில் எமன் வடிவில் வந்த மலைத்தேனீக்கள்.. ஒருவர் பரிதாப பலி.!
பேருந்து நிறுத்தத்தில் எமன் வடிவில் வந்த மலைத்தேனீக்கள்.. ஒருவர் பரிதாப பலி.!
முள்ளம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவரின் மீது, திடீரென தேனிக்கள் கொட்டியதால் உயிர் பறிபோனது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முள்ளம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி. இவர் சம்பவத்தன்று தனது ஊரின் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார்.
அச்சமயம், எங்கிருந்தோ பறந்து வந்த மலைத்தேனீக்கள், திடீரென பெரியசாமியை ஆவேசமாக தாக்கியது. இந்த சம்பவத்தில் பெரியசாமி நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதையும் படிங்க: #JustIN: இருசக்கர வாகனத்தின் மீது உரசிய லாரி.. நிலைதடுமாறி விழுந்ததில் கணவர் கண்முன் மனைவி பலி.!
ஒருவர் பலி., 3 பேர் காயம்
தென்னை மரத் தோப்பில், மரத்தை சீர் செய்ய சென்றிருந்த 3 பேரும் மலைத்தேனீக்கள் தாக்குதலால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், உயிரிழந்த பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காதல் திருமணம்.. மனைவி, 3 வயது குழந்தை மரணம்.. கணவரை நொறுக்கிய பெண் தரப்பு.!