12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிக்கு, தேர்வு அறையிலேயே பாலியல் தொல்லை; ஆசிரியர் அதிர்ச்சி செயல்.!
12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிக்கு, தேர்வு அறையிலேயே பாலியல் தொல்லை; ஆசிரியர் அதிர்ச்சி செயல்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை சாலையில், தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்த 17 வயது சிறுமி, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், நேற்று உயிரியல் தேர்வு எழுத சென்றார்.
அங்கு பணியில் மேற்பார்வையாளராக வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் (44) என்பவர் பொறுப்பில் இருந்தார். இவர் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆவார். சிறுமி தேர்வெழுதியபோது, அவரின் தோல்களில் கைவைத்து ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
தேர்வு அறையில் தொல்லை
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தேர்வை சரிவர எழுத இயலாமல் திணறி இருக்கிறார். தேர்வு முடிந்த பின்னர் பதற்றம், சோறுடன் இருந்த சிறுமியை பார்த்த பள்ளியின் முதல்வர் வினவி இருக்கிறார். அப்போது, ஆசிரியர் ரமேஷின் செயல்கள் குறித்து கூறவே, உடனடியாக தேர்வு மைய பொறுப்பாளரான அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வம், பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: #Breaking: தேர்வு மைய அறையிலேயே 18 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்ஸோவில் கைது.. கிருஷ்ணகிரியில் மீண்டும் அதிர்ச்சி.!
புகாரை ஏற்ற காவல் துறையினர், போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை முன்னெடுத்தனர். குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். விசாரணையைத் தொடர்ந்து ஆசிரியர் ரமேஷ் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: சடலத்துக்கு புதிய வேஷ்ட்டி சட்டை.. கதறிய படியே நடந்த திருமணம்.. கிருஷ்ணகிரியில் சோகம்.!