சடலத்துக்கு புதிய வேஷ்ட்டி சட்டை.. கதறிய படியே நடந்த திருமணம்.. கிருஷ்ணகிரியில் சோகம்.!
சடலத்துக்கு புதிய வேஷ்ட்டி சட்டை.. கதறிய படியே நடந்த திருமணம்.. கிருஷ்ணகிரியில் சோகம்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் அருகே வரதராஜ் என்ற 60 வயது நபர் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா (48 வயது) என்ற மனைவியும் மனிஷ் (26 வயது) என்ற மகனும் இருந்துள்ளனர். மனிஷுக்கு காவிய பிரியா (21 வயது) என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திங்கள்கிழமையான நேற்று இவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், திருமண சடங்குகளின் போது மாப்பிள்ளையின் தந்தை வரதராஜ் திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். அப்போது குடும்பத்தினர் பதறி அடித்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது உறவினர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், திருமணம் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. அப்போது, வரதராஜனின் மனைவியான மஞ்சுளா இதில் தலையிட்டு இந்த திருமணம் நடக்க வேண்டும் என்று தான் என் கணவர் மிக ஆவலுடன் இருந்தார்.
இதையும் படிங்க: காதலிக்க நான், கல்யாணத்துக்கு வேறொரு ஆளா? காதலனின் திருமணத்தை நிறுத்தி, கம்பி எண்ண வைத்த காதலி.!
எனவே, அவரது ஆசையை நிராசையாக்க கூடாது திருமணத்தை குறித்த படி நடத்த வேண்டும் என்று கூறினார். வரதராஜனின் உடலை குளிப்பாட்டி புதிய வேஷ்டி, சட்டை அணிவித்து அவரது சடலத்திற்கு முன்பாக மகன் அந்த பெண்ணுக்கு தாலி கட்டினார். இந்த சம்பவம் அங்கு இருந்தோர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அனைவரும் மணமக்களை நீர் நிரம்பிய கண்களுடன் வாழ்த்தினர்.
இதையும் படிங்க: மகனின் திருமணத்திற்கு முந்தைய நாள் விதிமுடிந்த தந்தை; உயிரிழந்த அப்பா முன் திருமணம் நடத்திய உறவினர்கள்.! சோகத்திலும் நெகிழ்ச்சி சம்பவம்.!