மருத்துவமனை கழிவறையில் வாயில் நுரைதள்ளிய நிலையில் இளைஞர்; அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனை கழிவறையில் வாயில் நுரைதள்ளிய நிலையில் இளைஞர்; அதிர்ச்சி தகவல்.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன். இவரின் மகன் சந்தான கோபாலன் (வயது 22). இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி பகுதியில் செயல்பட்டு வரும் பார்மசி கல்லூரியில், நான்காம் ஆண்டு பயின்று வருகிறார்.
சமீபத்தில் கல்லூரி நிர்வாகம் சார்பில், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். நேற்றும் வழக்கம்போல் மருத்துவக்கல்லூரிக்கு சென்றவர், நண்பரிடம் கழிப்பறை சென்று வருவதாக கூறி புறப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சடலம் மீட்பு
பின் நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால், கழிப்பறைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு கதவு தாழிடப்பட்டு இருந்ததால், கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, வாயில் நுரைதள்ளிய நிலையில் அவர் மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக மருத்துவரிடம் சந்தான கோபாலன் அழைத்து செல்லப்பட, அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நள்ளிரவில் பெண்ணை நோட்டமிட்ட 2 பேர்.. 10 இடங்களில் சரமாரியாக குத்திக்கொலை.!
கழிவறையில் வலி நிவாரணி குப்பிகள், ஊசிகள் இருந்துள்ளன. இதனால் வலி நிவாரணி மருந்தை பயன்படுத்தி உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஈரோடு: வேகத்தடையில் இளைஞருக்கு காத்திருந்த எமன்; வேலைக்கு சென்று வரும்போது சோகம்.!