தூக்கத்தில் இருந்த இளைஞரை எழுப்பி கொடூரமாக கொலை; சரமாரியாக வெட்டி பயங்கரம்...! மதுரையில் பகீர்.!
தூக்கத்தில் இருந்த இளைஞரை எழுப்பி கொடூரமாக கொலை; சரமாரியாக வெட்டி பயங்கரம்...! மதுரையில் பகீர்.!

உறங்கிக்கொண்டு இருந்த இளைஞரை எழுப்பி கொலை செய்த பயங்கரம் நடந்துளளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள சிலைமான் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவரின் மகன் அழகர்சாமி (வயது 19). இவர் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டும் பயின்று இருக்கிறார்.
இதையும் படிங்க: மதுரை: தனியார் பேருந்தின் அதிவேகத்தால் நேர்ந்த சோகம்; மூதாட்டி பலி, 15 பேர் படுகாயம்..!
தற்போது கூலி வேலைக்கு சென்று வருகிறார். இதனிடையே, நேற்று முன்தனத்தில் வேலைக்கு சென்றவர், பின் மீண்டும் இரவில் வீட்டுக்கு வந்து உறங்கி இருக்கிறார்.
சரமாரியாக வெட்டிக்கொலை
இதனிடையே, அதிகாலை சுமார் 3 மணியளவில், அழகர் சாமியின் வீட்டுக்கு 8 பேர் கும்பல் வந்துள்ளது. இந்த கும்பலை சேர்ந்தவர்கள் அழகரை வீட்டுக்கு வெளியே அழைத்தனர்.
விபரீதம் தெரியாமல் வந்த அழகரை, பயங்கர ஆயுதத்தால் சுற்றிவளைத்த கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பிச் சென்றது.
கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து அழகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: மதுரை: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 6 சிறார்கள் அதிர்ச்சி செயல்.!