மதுரை: தனியார் பேருந்தின் அதிவேகத்தால் நேர்ந்த சோகம்; மூதாட்டி பலி, 15 பேர் படுகாயம்..!
மதுரை: தனியார் பேருந்தின் அதிவேகத்தால் நேர்ந்த சோகம்; மூதாட்டி பலி, 15 பேர் படுகாயம்..!
மதுரை மாவட்டத்தில் உள்ள மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தத்தில் இருந்து, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு செந்தாமரை என்ற தனியார் நிறுவன பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து அதிவேகம், குறைந்த நேர பயணத்துக்கு பிரபலமானது ஆகும்.
இதனிடையே, இன்று பரமக்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து செந்தாமரை தனியார் பேருந்து மாட்டுத்தாவணி நோக்கி பயணம் செய்தது. பேருந்து விரகனூர் சுற்றுவட்டார சாலை வந்தபோது, அதிவேகத்தில் வந்த பேருந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
ஒருவர் பலி, 17 பேர் படுகாயம்
இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கம் 5 இருக்கைகள் வரை நொறுங்கியபோனது. மேலும், ஓட்டுநர் உட்பட 17 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். மூதாட்டி ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மதுரை: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 6 சிறார்கள் அதிர்ச்சி செயல்.!
மேலும், உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், விபத்து குறித்தும் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயம் அடைந்த பயணிகள் மதுரை அரசு & தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: #JustIN: தென்மாவட்டத்தில் ஜாதிய கொலைகள் அதிகரிப்பு - விசிக திருமாவளவன் பேட்டி.!