தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மதுரை: பெண்ணின் அழுகிய சடலம் மீட்கப்பட்ட விவகாரம்; இருவர் கைது.. பரபரப்பு தகவல் அம்பலம்.!

மதுரை: பெண்ணின் அழுகிய சடலம் மீட்கப்பட்ட விவகாரம்; இருவர் கைது.. பரபரப்பு தகவல் அம்பலம்.!

in Madurai Avaniyapuram Woman Killed  Advertisement

 

மதுரையில் உள்ள அவனியாபுரம், ஈச்சனேரி பகுதியில், கடந்த மார்ச் 04 அன்று பெண்ணின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தினர். 

விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டது வில்லாபுரம், மீனாட்சி நகரில் வசித்து வரும் நடராஜன் என்பவரின் மனைவி இந்திராணி (வயது 70) என்பது தெரியவந்தது. இவர் மதுரை ஆவின் கண்காணிப்பாளராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர் ஆவார். கடந்த 2020 முதல், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கீரைத்துறை பகுதியில் தனியே வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி 20ம் தேதி அவர் மாயமானார். 

இதையும் படிங்க: மதுரை: கபடி விளையாட்டில் நேர்ந்த சோகம்.. இளம் வீரர் பரிதாப பலி.. ஊரே திரண்டு கண்ணீருடன் அஞ்சலி.!

madurai

நகைக்காக நடந்த கொலை

இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய ஞிலையில், சந்திரசேகர் (50), அமர்நாத் (39) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கணவரை பிரிந்த இந்திராணிக்கு, சந்திரசேகர் உதவி செய்து வந்துள்ளார். இதனிடையே, அவரின் வீட்டில் இந்த 10 சவரன் நகை மாயமாகவே, வாக்குவாதம் உண்டாகியுள்ளது. வாக்குவாதத்தில் நடந்த தாக்குதலில் இந்திராணி உயிரிழந்தார். 

வழக்குக்கு பயந்த சந்திர சேகர் அமர்நாத் உதவியுடன் இந்திராணியின் உடலை சாக்கில் மூட்டை கட்டி, ஈச்சனேரி பகுதியில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து, பெருங்குடி காவல்துறையினர் சந்திரசேகர், அமர்நாத் ஆகியோரை கைது செய்தனர். 

இதையும் படிங்க: மதுரை: 18 வயதில் வழிப்பறி கொலை., 20 வயதில் வழக்கு விரக்தியால் தற்கொலை.. இளைஞரின் விபரீத முடிவு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#madurai #Avaniyapuram #tamilnadu #Crime #மதுரை #அவனியாபுரம் #தமிழ்நாடு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story