#JustIN: தென்மாவட்டத்தில் ஜாதிய கொலைகள் அதிகரிப்பு - விசிக திருமாவளவன் பேட்டி.!
#JustIN: தென்மாவட்டத்தில் ஜாதிய கொலைகள் அதிகரிப்பு - விசிக திருமாவளவன் பேட்டி.!

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் & மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "தென்மாவட்டத்தில் ஜாதிய வன்முறைகள், குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஜாதிய கொலைகள் நடந்துள்ளன. ஜாதிய கொலைகளை தடுக்க நுண்ணறிவு பிரிவு தேவை என நீண்ட காலமாக விசிக வலியுறுத்தி வருகிறது.
நுண்ணறிவு தடுப்புபிரிவு தேவை
சாதி, மத்தத அடிப்படையில் வன்முறை நடக்காமல் இருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தில் மாணவர் தாக்கப்பட்ட விஷயத்திலும் ஜாதிய பின்புலம் இருக்கிறது. அவரை சந்திக்க நேரில் செல்கிறேன். நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நுண்ணறிவு பிரிவு தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்" என பேசினார்.
இதையும் படிங்க: #Breaking: எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய தடை - மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி.!
இதையும் படிங்க: மதுரை: பெண்ணின் அழுகிய சடலம் மீட்கப்பட்ட விவகாரம்; இருவர் கைது.. பரபரப்பு தகவல் அம்பலம்.!