தாய், இரண்டு குழந்தைகள் மரணம்..கடிதம் எழுதி வைத்து மாயமான கணவர்.. நாமக்கல்லில் சோகம்.!
தாய், இரண்டு குழந்தைகள் மரணம்..கடிதம் எழுதி வைத்து மாயமான கணவர்.. நாமக்கல்லில் சோகம்.!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதி நகரில் வசித்து வருபவர் பிரேம் ராஜா. இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரின் மனைவி மோகனப்பிரியா (வயது 33). தம்பதிகளுக்கு பிரநிதி என்ற 6 வயது மகள், பிரனீஷ் என்ற 1 வயது கைக்குழந்தை இருக்கிறது.
இதையும் படிங்க: விஷத்துடன் இருந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன்.. தற்கொலை செய்தவர் வைத்த மிச்சத்தால் நடந்த சோகம்.!
வீட்டுக்குள் சடலம்
இன்று இவர்களின் வீட்டில் நடமாட்டம் இல்லாததால், அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் நேரில் வந்த அதிகாரிகள் வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது, மோகனப்பிரயா, பிரநிதி, பிரனீஷ் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டது தெரியவந்தது. மேலும், பிரேம்ராஜ் கடிதம் எழுதி வைத்து தலைமறைவானார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 14 வயது மாணவர் அடித்துக்கொலை.. நீயா? நானா போட்டியில் நடந்த பயங்கரம்.. நாமக்கல்லில் அதிர்ச்சி.!