விஷத்துடன் இருந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன்.. தற்கொலை செய்தவர் வைத்த மிச்சத்தால் நடந்த சோகம்.!
விஷத்துடன் இருந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன்.. தற்கொலை செய்தவர் வைத்த மிச்சத்தால் நடந்த சோகம்.!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை, சித்தூர், அவிரிக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் பழனிச்சாமி (வயது 24). நேற்று முன்தினம் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து மயங்கி இருந்தார்.
இவரின் உறவினர் மகன் பிரதீப் (வயது 10). சிறுவன் பழனிச்சாமி குடித்து வீசிய குளிர்பானத்தில் மீதியை எடுத்து குடித்து இருக்கிறான்.
மருத்துவமனையில் அனுமதி
குளிர்பானம் கசப்பாக இருந்ததால் கீழே துப்பிய நிலையில், பெற்றோரிடம் கூறி இருக்கிறான். பின் உறவினர்கள் பழனிசாமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க, பழனிச்சாமியின் மரணம் மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: 14 வயது மாணவர் அடித்துக்கொலை.. நீயா? நானா போட்டியில் நடந்த பயங்கரம்.. நாமக்கல்லில் அதிர்ச்சி.!
சிறுவன் பிரதீப் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக செங்கரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆங்கில பாடத்தில் சந்தேகம் கேட்ட மாணவிகளை கொல்லிமலைக்கு அழைத்த ஆசிரியர்; போக்ஸோவில் தூக்கிய காவல்துறை.!