ஆங்கில பாடத்தில் சந்தேகம் கேட்ட மாணவிகளை கொல்லிமலைக்கு அழைத்த ஆசிரியர்; போக்ஸோவில் தூக்கிய காவல்துறை.!
ஆங்கில பாடத்தில் சந்தேகம் கேட்ட மாணவிகளை கொல்லிமலைக்கு அழைத்த ஆசிரியர்; போக்ஸோவில் தூக்கிய காவல்துறை.!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாப்பட்டு பகுதியில், பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் பாடத்தை கவனித்து சந்தேகம் கேட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நாமக்கல்: குடிக்க பணம் கொடு.. மாற்றுத்திறனாளி மீது சரமாரி தாக்குதல்.. இளைஞர் அதிர்ச்சி செயல்.!
அப்போது, ஆசிரியர் அவர்களுக்கு விளக்கம் சொல்கிறேன் என்ற பெயரில், நாம் கொல்லிமலைக்கு சென்று வர வேண்டும் என ஆபாசமான வகையில் கூறி இருக்கிறார்.
பாலியல் தொல்லை
இதனால் வீட்டிற்கு சென்ற மாணவிகள் பெற்றோரிடம் கூற, அவர்கள் கடந்த வாரம் புகார் அளிக்க முன்வந்து, பள்ளியின் தரப்பில் சரிவர பதில் அளிக்கவில்லை.
பின் இதுதொடர்பாக பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம் நடத்தவே, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி, ஆசிரியர் செல்வகுமாரை (வயது 52) போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நாமக்கல்: கேடி மாமியாரும், கேப்பில் கிடா வெட்டிய மருமகளும்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கப்பட்ட மாமியார்.. திடுக் பின்னணி.!