மழை நேரத்தில் அதிவேகம்.. டூவீலர்-அரசுப்பேருந்து மோதல்: சாக்கு வியாபாரி பலியானதன் பதறவைக்கும் காட்சிகள்.!
மழை நேரத்தில் அதிவேகம்.. டூவீலர்-அரசுப்பேருந்து மோதல்: சாக்கு வியாபாரி பலியானதன் பதறவைக்கும் காட்சிகள்.!
அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளானதில், சாக்கு வியாபாரி உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு, திருச்செங்கோடு - ஈரோடு சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று வந்தது. மழை நேரம் என்பதால் சாலை ஈரமாக இருந்தது.
இதனிடையே, மாநகர அரசுப் பேருந்து ஈரோடு - திருச்செங்கோடு சாலையில் மிதமான வேகத்தில் வந்தது. அப்போது, இருசக்கர வாகனம் அதிவேகத்துடன் வந்த நிலையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதையும் படிங்க: மகனை அழைத்துவர ஆவலுடன் சென்றபோது விபரீதம்; பாரதிதாசன் பல்கலை., பேராசிரியர் விபத்தில் பலி.!
இதனால் எதிர்திசையில் பயணித்த வாகனம், அரசுப்பேருக்கு மீது நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பதறவைக்கும் காட்சிகள்
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், உயிரிழந்தவர் சாக்கு வியாபாரி ராமலிங்கம், அவர் ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இந்த விபத்தின் பதைபதைப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன.
வீடியோ நன்றிநியூஸ்தமிழ் 24X7
இதையும் படிங்க: நாமக்கல்: தேசிய நெடுஞ்சாலையில் வால்கிங்.. 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆம்னி வேன் மோதி மரணம்.!