சிறுத்தை தாக்கி பெண் பரிதாப பலி; நீலகிரியில் சோகம்.!
சிறுத்தை தாக்கி பெண் பரிதாப பலி; நீலகிரியில் சோகம்.!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மைனலை பகுதியில் வசித்து வருபவர் கோபால். இவரின் மனைவி அஞ்சலை. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. கோபால் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இதனிடையே, நேற்று காலை வீட்டில் இருந்து அஞ்சலை வெளியேறிய நிலையில், அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. இதனால் அஞ்சலையை உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.
இதையும் படிங்க: 44 பயணிகள் உயிர் தப்பியது.. ஓட்டுனருக்கு திடீர் தலைசுற்றல்.. மசினகுடி மலையில் பீதியான பயணிகள்.!
இந்நிலையில், இன்று காலை நேரத்தில் மைனலை, அரக்காடு தேயிலை தோட்டத்தில் வடமாநில பணியாளர்கள், தேயிலை பறிக்கச் சென்றனர். அப்போது, பெண் சடலம் இருந்தது.
சிறுத்தை தாக்கி மரணம்
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். அப்போது, சடலமாக மீட்கப்பட்டது அஞ்சலை என்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், அவர் சிறுத்தை தாக்கி உயிரிழந்தது உறுதியானதால், வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு இதே பகுதியில் வடமாநில தேயிலை தோட்ட தொழிலாளரின் குழந்தை சிறுத்தை தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சித்தப்பா, 85 தாத்தா, 25 வயது இளைஞன் என சிறுமியை திட்டமிட்டு வேட்டையாடிய கொடுமை.. ஊட்டியில் அதிர்ச்சி.!