தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: காவலர் கண்முன் இளைஞர் வெட்டிக்கொலை? பெரம்பலூரில் பதற்றம்.. காவல் நிலையம் கண்ணாடி உடைப்பு.!

#Breaking: காவலர் கண்முன் இளைஞர் வெட்டிக்கொலை? பெரம்பலூரில் பதற்றம்.. காவல் நிலையம் கண்ணாடி உடைப்பு.!

  in Perambalur Youth Killed  Advertisement

சமாதான பேச்சுவார்த்தை நடத்தச்சென்ற இடத்தில், காவலர் கண்முன் இளைஞர் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்து இருக்கிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, கைகளத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் மோகன். இவரின் மனைவி செல்வி. தம்பதிகளுக்கு மணிகண்டன் என்ற மகன் இருக்கிறார். இதே கிராமத்தில் வசித்து வருபவர் தேவேந்திரன். தேவேந்திரனுக்கும் - மணிகண்டனுக்கு இடையே, நெல் அறுவை இயந்திரம் தொடர்பாக முன்விரோதம் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சமாதானம் பேச, தலைமை காவலர் ஸ்ரீதர் என்பவர், இருவரையும் வயல்காட்டு பகுதிக்கு அழைத்துள்ளார். 

சமாதான பேச்சுவார்த்தையில் சோகம்

அங்கு சமாதான பேச்சுவார்த்தை நடந்தபோது, தேவேந்திரன் மணிகண்டனை வெட்டிக்கொலை செய்தார். காவல் அதிகாரியின் முன்னிலையிலேயே கொலை சம்பவம் நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மணிகண்டனின் உடலுடன் கைகளத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று போராட்டம் செய்தனர். காவல் நிலையம் முற்றுகையிட்டு போராட்டம் நடந்த நிலையில், காவல் நிலையத்தின் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி காவல் துறையினர் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வீட்டுக்குள் புகுந்த ரௌடியை தீர்த்துக்கட்டிய 6 பேர் கும்பல்; சென்னையில் பயங்கரம்.!

Murder

காவலர் முன்னிலையில் கொலை?

அருண், தேவேந்திரனிடம் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். நேற்று மணிக்கும் - தேவேந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்த நிலையில், காவல்துறையினர் முன்னிலையில் இன்று சமாதான முயற்சிகள் நடைபெற்றன. ஒருகட்டத்தில் மணி அதிகாரிகள் உதவியுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, தேவேந்திரன் காவலர் முன்னிலையிலேயே, வாகனத்தை மறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய தேவேந்திரனை கைது செய்ய வேண்டும், உடந்தையாக இருந்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணிகண்டனின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். காவல் நிலையத்திற்குள் தேவேந்திரன் இருக்கலாம் என நினைத்து, கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன. நல்வாய்ப்பாக காவல் நிலையம் பூட்டு போடப்பட்டதன் காரணமாக, கிராமத்தினர் உள்ளே நுழைந்து தாக்கும் சம்பவம் தவிர்க்கப்பட்டது.

இதையும் படிங்க: மகனை இரும்பு கம்பியால் அடித்தே கொன்ற தந்தை; சேலத்தில் பரபரப்பு சம்பவம்.. காரணம் என்ன?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #murder case #Perambalur #பெரம்பலூர் #Police station
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story