சாப்பிட உணவுக்கு பில் கொடுக்க வந்தவர் மாரடைப்பால் பலி.. வருந்தவைக்கும் காட்சிகள்.!
சாப்பிட உணவுக்கு பில் கொடுக்க வந்தவர் மாரடைப்பால் பலி.. வருந்தவைக்கும் காட்சிகள்.!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜ்மந்த் நகராட்சியில், துப்புரவு பணியாளராக வேலை பார்ப்பவர் சச்சின் (வயது 27). கடந்த சனிக்கிழமை, இவர் பணியை முடித்துவிட்டு உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளார்.
அப்போது, சாப்பிட்ட உணவுக்கு பில் கொடுக்க சென்றுள்ளார். அப்போது, அவர் பணத்தை எடுத்து பில்லை கொடுக்க முற்பட்டபோது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்படுத்தி மயங்கி விழுந்தார்.
இதையும் படிங்க: ஆரணி அரசு மருத்துவமனை அலட்சியத்தால் பறிபோன உயிர்.. 8 மாத கைக்குழந்தை, மனைவி பரிதவிப்பு.!
மாரடைப்பு மரணம்
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மரணத்தை உறுதி செய்தனர்.
மேலும், அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: கிரிவலத்தில் நடந்த சோகம்; வழிதவறிய பெண் நெஞ்சு வலியால் மரணம்.!