7 வயது சிறுவன் கண்மாய் நீரில் மூழ்கி பலி.. பெற்றோர் கண்ணீர்.!
7 வயது சிறுவன் கண்மாய் நீரில் மூழ்கி பலி.. பெற்றோர் கண்ணீர்.!

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை, பதனக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, விஷ்ணுவர்தன் என்ற 7 வயதுடைய மகன் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: தொழிலதிபர் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் துள்ளத்துடிக்க முகம் சிதைத்து படுகொலை; பரமக்குடியில் பகீர்.!
சிறுவன் விஷ்ணுவர்தன், அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று முன்தினம் சிறுவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பினார்.
சிறுவன் மரணம்
பின் அவர் எங்கே சென்றார் என தெரியவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் மகனை பல இடங்களில் தேடினர். மேலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
இந்நிலையில், சிறுவன் வீட்டருகே இருக்கும் கண்மாயில் சடலமாக மிதந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் எப்படி கண்மாய்க்கு சென்றார்? என்ன நடந்தது? ந விசாரணை நடக்கிறது.
இதையும் படிங்க: #JustIN: வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிப்படுகொலை; பரமக்குடியில் பரபரப்பு.!