காதல் திருமணம் செய்த மகன் முன் கழுத்தில் கத்தியுடன் நின்ற தாய்; பதறவைக்கும் சம்பவம்..!
காதல் திருமணம் செய்த மகன் முன் கழுத்தில் கத்தியுடன் நின்ற தாய்; பதறவைக்கும் சம்பவம்..!

மகனின் காதல் திருமண விஷயத்தில் எதிர்ப்பாக இருந்த தாய், விவசாய பணிகளை மகன் செய்ய கூடாது என தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் நடந்துள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருபவர் பூபாலன். இவரின் மனைவி முத்துலட்சுமி. தம்பதிகளுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் இருக்கும் நிலையில், அதில் தம்பதியின் பெயரில் சரிபங்கு என தலா 5 ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன.
இதையும் படிங்க: தந்தையின் கண்முன் மகளுக்கு நேர்ந்த சோகம்; பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பயங்கரம்.!
மகனின் மீது வெறுப்பு
இதில் ஒற்றுமையாக குடும்பத்துடன் இவர்கள் விவசாய பணிகளை செய்து வந்துள்ளனர். தம்பதிகளின் பிள்ளைகளுக்கு திருமணமாகி, அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இவர்களில் கடைக்குட்டி மகன் அசோக், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பெற்றோரின் விருப்பத்தை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டார். மகனின் காதல் திருமணம் முத்துலட்சுமிக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்விரோதம்
இதனால் அசோக் தனது மனைவியுடன் ஆற்காடு பகுதியில் தங்கியிருந்து வருகிறார். அசோக் தனது பெற்றோரின் நிலத்தில் நெல் பயிரிட முற்பட்டபோது, இருதரப்புக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. காவல் நிலையத்தில் சமாதானம் பேசப்பட்டு, முத்துலட்சுமி விவசாய பணிகள் செய்ய சம்மதித்துள்ளார்.
தற்கொலை மிரட்டல்
இதற்கான முதற்கட்ட பணிகள் அனைத்தும் நிறைவுபெற்ற நிலையில், சம்பவத்தன்று அசோக் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது, கையில் கத்தியுடன் வந்த முத்துலட்சுமி, காதல் திருமணம் செய்த நீ, விவசாயம் செய்ய என் நிலத்திற்கு வந்தால் என் கழுத்தை அறுத்து தற்கொலை செய்வேன் என மிரட்டி இருக்கிறார்.
இதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்ட அசோக், அதிகாரிகள் உரிய முறையில் விசாரணை நடத்தி தனக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும், சிறுவயதில் இருந்து விவசாய பணிகளையே செய்து வந்ததால், வேறெந்த பணியும் தனக்கு தெரியாது எனவும் கூறி தவித்து வருகிறார்.
இதையும் படிங்க: #Breaking: பெட்ரோல் குண்டு வீசி 21 வயது இளைஞர் கொலை.. அன்புமணி ஆவேசம்.. பரபரப்பு பேட்டி.!