நடுரோட்டில் துள்ளதுடிக்க நடந்த படுகொலை; நேரில் பார்த்து பதறியோடிய மக்கள் கூட்டம்.. 3 பேர் கும்பல் பகீர் செயல்.!
நடுரோட்டில் துள்ளதுடிக்க நடந்த படுகொலை; நேரில் பார்த்து பதறியோடிய மக்கள் கூட்டம்.. 3 பேர் கும்பல் பகீர் செயல்.!
டீ குடிக்க சாலையோரம் நடந்து வந்த பேருந்து ஓட்டுநர், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணத்தில் நடந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம், பாபநாசம், பசுபதி கோவில் கிராமம், திரௌபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சங்கர். இவரின் மகன் சிவா மணிகண்டன் (வயது 28), தற்போது மினி பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கண்டியூரில் இருந்து அய்யம்பேட்டை வரை இயங்கும் மினி பேருந்தை இவர் இயக்கி வருகிறார்.
அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்:
இதனிடையே, சம்பவத்தன்று தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில், அய்யம்பேட்டையில் வாகனத்தை நிறுத்திய சிவா, டீ குடிக்க சாலையோரமாக நடந்து வந்தார். அச்சமயம், அங்கு வந்த 3 பேர் கும்பல், சிவாவை நடுரோட்டில் மறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. சாலை வழியாக சென்றவர்கள் பலரும், இந்த சம்பவத்தை நேரில் பார்த்து அச்சத்தில் உறைந்து திகைத்தனர். யாரும் உதவ / காப்பாற்ற முன்வரவில்லை.
இதையும் படிங்க: மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்... ஆசிரியர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்.!!
காவல்துறையினர் விசாரணை
சில நொடிகளில் சிவாவை கொன்ற கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றது. நடுரோட்டில் துள்ளத்துடிக்க சிவா கொலை செய்ய்யப்ட்ட நிலையில், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோத தகராறில் கொலை?
முதற்கட்ட விசாரணையில், நேற்று முந்தினம் இரவு நேரத்தில் சிவாவுக்கும் - சில நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்குப்பின் தான் கொலை நடந்துள்ளது என்பது உறுதியானது. இதனால் மூவர் கும்பலுக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.
கொலை சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி கேமிரா காட்சிகள்
வீடியோ நன்றி: தந்தி டிவி
இதையும் படிங்க: விசாரணைக்கு தொடர்புகொண்ட பெண் காவலருக்கு பாலியல் தொல்லை; ஜேசிபி உரிமையாளர் கைது..!