தேனி: திருமணமான மினி பஸ் ஓட்டுனருடன் பழக்கம்; ஜோடியாக இரயில் முன் பாய்ந்து தற்கொலை.. உடல் சிதறி மரணம்.!
தேனி: திருமணமான மினி பஸ் ஓட்டுனருடன் பழக்கம்; ஜோடியாக இரயில் முன் பாய்ந்து தற்கொலை.. உடல் சிதறி மரணம்.!
பேருந்து பயணத்தில் ஏற்பட்ட பழக்கம், இரண்டு பேரின் உயிருக்கு எமனான சோகம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, குதிரையாறு அணைப்பகுதி, ஆண்டிபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 35). இவர் மினி பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: வீட்டு வாசலில் பாத்திரம் கழுவிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. விசிக நிர்வாகி கைது.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி, அன்னை சத்யா தெருவில் வசித்து வருபவர் ரத்தினசாமி. இவரின் மகள் சம்யுக்தா (வயது 21). இவர் அவ்வப்போது மினி பேருந்தில் பயணம் செய்வது வழக்கம்.
ஜோடியாக சேர்ந்து விபரீதம்
இந்த பயணத்தில் மணிகண்டன் - சம்யுக்தா இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இருவரும் TN94 D7099 பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தில் தேனிக்கு வந்தனர். மதுரை சாலையில் உள்ள குன்னூர் இரயில்வே பாலம் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டு இருந்தனர்.
பின் இருவரும் தண்டவாளத்தில் ஏறி நின்றுள்ளார். அச்சமயம், போண்டி - சென்னை அதிவிரைவு இரயில் வந்து மோதியதில், இருவரும் உடல் துண்டாகி சிதறி உயிரிழந்தனர். இவர்களின் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் மோதியதில் துண்டாகிய உடல் பாகங்களை மீட்ட அதிகாரிகள், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: 4 பேர் கும்பலால் 22 வயது இளம்பெண் கூட்டுப்பலாத்காரம்; தேனியில் பயங்கரம்.!