#Breaking: ஜாகிர் உசேனின் உடலை பெற உறவினர்கள் ஒப்புதல்; உதவி ஆணையர், ஆய்வாளர் விரைவில் சஸ்பெண்ட்.!
#Breaking: ஜாகிர் உசேனின் உடலை பெற உறவினர்கள் ஒப்புதல்; உதவி ஆணையர், ஆய்வாளர் விரைவில் சஸ்பெண்ட்.!

திருநெல்வேலி மாநகர பகுதியில் வசித்து வருபவர் ஜாகிர் உசேன். இவர் முன்னாள் தலைமை காவலர் ஆவார். தற்போது தனது பகுதியில் உள்ள மசூதியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று அதிகாலை அவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மசூதிக்கு தொழுகைக்குச் சென்று மீண்டும் வெளியே வரும்போது படுகொலை சம்பவம் நடைபெற்றது.
ஓய்வுபெற்ற காவலர் கொலை
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய உசேன், தனது பகுதியில் நடந்த வக்பு வாரிய முறைகேடுகளை எதிர்த்ததால், 30 பேரால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறப்படுகிறது. அதேநேரத்தில், ரியல் எஸ்டேட் பணிகளை கவனித்து வந்த உசேனுக்கு, பக்கத்தில் வசித்து வரும் நபருக்கும் இடையேயான முன்விரோதத்தில் கொலை நடந்திருப்பதாக அரசுதரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நெல்லை: சிகிச்சைக்கு வந்த 24 வயது இளம்பெண்ணிடம் ஆபாச பேச்சு; மருத்துவர் கைது.!
உடலை பெற்றுக்கொள்ள ஒப்புதல்
இந்நிலையில், காவல் உதவி ஆணையர் செந்தில் குமார், காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் பணியிடைநீக்கம் தொடர்பான அறிவிப்பு வந்ததும் ஜாகிர் உசேனின் உடலை பெற்றுக்கொள்கிறோம். தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை மட்டும் கைவிடுகிறோம் என மறைந்த ஜாகிர் உசேனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகர ஆணையர் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டு, உதவி ஆணையர், ஆய்வாளர் பணியிடைநீக்கத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனால் அறிவிப்பு வந்ததும் உடலை பெறுவோம், இப்போதைக்கு சாலை மறியல் மட்டும் கைவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டப்பேரவையில் எதிர்கட்சியின் சார்பில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், ஜாகிர் உசேனின் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். அதற்கு அரசு உறுதி அளிக்கிறது என கூறினார்.
இதையும் படிங்க: இன்னும் எத்தனை உயிர்கள்? நெல்லையில் நடந்த கொலை விவகாரம்; கடும் அண்ணாமலை கண்டனம்!