சறுக்கல் விளையாட்டில் சோகம்.. சிறுமியின் விரல் துண்டானது.. பராமரிப்பில்லாத பூங்காவில் துயரம்.!
சறுக்கல் விளையாட்டில் சோகம்.. சிறுமியின் விரல் துண்டானது.. பராமரிப்பில்லாத பூங்காவில் துயரம்.!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் பகுதியில் வசித்து வருபவர் ஆண்டியப்பன். இவரின் இளைய மகள் அனுஸ்ரீ (வயது 7). இவர் அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்று வருகிறார்.
சிறுமியை தினமும் பள்ளி நேரம் முடிந்ததும், அவரின் தந்த பாளை வ.உ.சி மைதானம், விளையாட்டு பூங்காவுக்கு விளையாட அழைத்து செல்வார். அந்த வகையில், நேற்று முன்தினம் மாலையும் பூங்காவுக்கு தந்தை - மகள் சென்றுள்ளனர்.
பழுதடைந்து இருந்தததால் சோகம்
அப்போது சருகில் விளையாடிபோது, பழுதடைந்து இருந்த சறுக்கின் உடைந்த துவார பகுதியில் சிறுமியின் இடது கால் சுண்டு விறல் சிக்கி துண்டாகியது. இதனால் ரத்தம் வெளியேறி சிறுமி அலறி இருக்கிறார்.
இதையும் படிங்க: தாயின் சடலத்துடன் சைக்கிளில் வலம்வந்த மகன்; கலங்கவைக்கும் துயரம்.!
மகளை பதற்றத்துடன் மீட்ட ஆண்டியப்பன், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தார். மருத்துவமனையில் சிறுமியின் விரலை ஒட்ட வைக்க இயலாது என தெரிவித்துவிட்டனர்.
பூங்கா பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் இவ்வாறான நிலை நடந்ததாக ஆதங்கப்பட்ட ஆண்டியப்பனின் கோரிக்கை ஏற்ற மாநகராட்சி அதிகாரிகள், சறுக்கை அப்புறப்படுத்தினர். மேலும், குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிப்பதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதையும் படிங்க: தமிழகமே அதிர்ச்சி.. பெண்ணுக்கு மது கொடுத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. நெல்லையில் பயங்கரம்.!