பிறந்தநாள் அன்று இப்படியா நடக்கணும்? 21 வயது கல்லூரி மாணவர் பலி.. இருசக்கர வாகன பயணத்தில் சோகம்.!
பிறந்தநாள் அன்று இப்படியா நடக்கணும்? 21 வயது கல்லூரி மாணவர் பலி.. இருசக்கர வாகன பயணத்தில் சோகம்.!

சொந்த பிறந்தநாளை கொண்டாடிய இளைஞர், விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலை முதலாக பலத்த மழை பெய்து வந்தது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், சைபர் செக்யூரிட்டி பிரிவில், இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் இன்பராஜ் (வயது 21), கதிர் (வயது 21).
இவர்களில் இன்பராஜ் ஊத்துமலை, ரெட்டியார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். நண்பர்களான இருவரும், நேற்று தங்களின் இருசக்கர வாகனத்தில் சென்றனர். கதிர் வாகனத்தை இயக்கி இருக்கிறார். மானூர், மாவடி பகுதியில் வந்தபோது, கதிரின் செல்போன் மழை நீரில் நனைந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: ஐஸ்கிரீம் விற்பனையாளருக்கு நேர்ந்த சோகம்.. சாலையை கடக்கும்போது கார் மோதி துயரம்.. பரிதாப பலி.!
விபத்தில் சிக்கி நேர்ந்த சோகம்
இதனால் வாகனத்தை இயக்கியபடி செல்போனை எடுக்க முற்படவே, வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. மேலும், சாலையை விட்டு விலகிச் சென்று, தடுப்பில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், வாகனத்தில் பயணம் செய்த இன்பராஜ், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கதிரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
இன்பராஜ் விபத்தில் உயிரிழந்தது உறுதியானதால், அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் குறித்து மானூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தால் அன்றே இன்பராஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அவரின் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: "புல்லா குடி, ஆக்சிலேட்டரை இறுக்கி பிடி" - 100ல் போனதால் 23 வயதிலேயே 108 வந்தும் பறிபோன உயிர்.!