தமிழகமே ஷாக்.. உடற்பயிற்சியின்போது துயரம்; பரிதாபமாக பறிபோன உயிர்.. மாரடைப்பால் சோகம்..!
தமிழகமே ஷாக்.. உடற்பயிற்சியின்போது துயரம்; பரிதாபமாக பறிபோன உயிர்.. மாரடைப்பால் சோகம்..!
உடற்பயிற்சி செய்த வாலிபர், மாரடைப்பால் காலமான சோகம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, மீஞ்சூர், வல்லூர் மின் நகர் பகுதியில் வசித்து வருபவர் வினோத் குமார் (வயது 35). இவருக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை.
ஜிம் பழக்கம்
இவர் வல்லுார் அனல் மின் நிலையத்தில், ஒப்பந்த பணியாளராக வேலை பார்க்கிறார். தினமும் தனியார் உடற்பயிற்சி மையத்திற்கு சென்று, அவர் உடற்பயிற்சி செய்து வருகிறார்.
இதையும் படிங்க: பர்வத மலைப் பயணத்தில் சோகம்; கள்ளக்குறிச்சி நபர் மாரடைப்பால் மரணம்.!
மாரடைப்பு
இதனிடையே, நேற்று காலை வழக்கம்போல அத்திப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உடற்பயிற்சி மையத்திற்கு வினோத் குமார் சென்றுள்ளார். அங்கு உடற்பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டதாக தெரியவருகிறது.
பரிதாப மரணம்
இதனால் நிலைகுலைந்து விழுந்த அவரை மீட்ட பணியாளர்கள், உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சில நிமிடங்களில் வினோத் உயிரிழந்தார்.
இந்த விஷயம் குறித்த தகவல் அறிந்த மீஞ்சூர் காவல்துறையினர், வினோத் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிவேகத்தில் எதிர்திசைக்குள் பாய்ந்த ஜீப்; லாரியுடன் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி.!