×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிவேகத்தில் எதிர்திசைக்குள் பாய்ந்த ஜீப்; லாரியுடன் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி.!

அதிவேகத்தில் எதிர்திசைக்குள் பாய்ந்த ஜீப்; லாரியுடன் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி.!

Advertisement

எதிர்திசை சாலைக்குள் பாய்ந்த ஜீப், லாரி மீது மோதி விபத்தில் சிக்கியதால் 3 பேர் உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கருகம்பத்தூர் பகுதியில், இன்று லாரி - ஜீப் வாகண்ணாம் வந்தது. இந்த இரண்டு வாகனமும் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில், வாகனத்தில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

அதிவேகத்தில் வந்த ஜீப், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் எதிர்திசையில் பாய்ந்துள்ளது. அங்கு சர்வீஸ் சாலையில் பயணித்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது.

இதையும் படிங்க: அதிவேகத்தால் அப்பளமாக நொறுங்கிய கார்; மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் உடல் நசுங்கி துள்ளத்துடிக்க மரணம்.!

3 பேர் நிகழ்விடத்திலேயே பலி

இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த 3 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஒருவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் சென்னையில் உள்ள மணலி பகுதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படிங்க: மழை நேரத்தில் அதிவேகம்.. டூவீலர்-அரசுப்பேருந்து மோதல்: சாக்கு வியாபாரி பலியானதன் பதறவைக்கும் காட்சிகள்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #National Highway Accident #vellore #வேலூர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story