காதலிக்க நான், கல்யாணத்துக்கு வேறொரு ஆளா? காதலனின் திருமணத்தை நிறுத்தி, கம்பி எண்ண வைத்த காதலி.!
காதலிக்க நான், கல்யாணத்துக்கு வேறொரு ஆளா? காதலனின் திருமணத்தை நிறுத்தி, கம்பி எண்ண வைத்த காதலி.!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, பெரியபாளையம், தும்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் லோகேஸ்வரன் (வயது 33). இவர் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். பொன்னேரியை அடுத்துள்ள கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவரிடம், லோகேஸ்வரன் ஹிந்தி மொழி பேச பயிற்சிக்கு சென்றுள்ளார்.
அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது காதலாக மாறியுள்ளது. இதனிடையே, லோகேஸ்வரனுக்கு வரன் பார்த்து வந்த பெற்றோர், வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த பெண், பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: மகனின் திருமணத்திற்கு முந்தைய நாள் விதிமுடிந்த தந்தை; உயிரிழந்த அப்பா முன் திருமணம் நடத்திய உறவினர்கள்.! சோகத்திலும் நெகிழ்ச்சி சம்பவம்.!
திருமணம் நின்றது, காதலன் கைது
மேலும், லோகேஸ்வரன் தன்னை காதலித்துவிட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்ய போவதாக புகார் அளிக்கவே, அதிகாரிகள் புகாரை ஏற்று விசாரணை செய்தனர். விசாரணையில் உண்மை அம்பலமாகவே, இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
லோகேஸ்வரன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த பெண் வீட்டார், திருமணத்தை நிறுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: தமிழ் திருமணம் மீது ஆசை.. பிரான்சிலிருந்து மானாமதுரைக்கு பறந்து வந்த தம்பதி.!