நிலத்தகராறில் பயங்கரம்.. மூதாட்டி எரித்துக்கொலை.!
நிலத்தகராறில் பயங்கரம்.. மூதாட்டி எரித்துக்கொலை.!

திருவண்ணாமலையில் உள்ள பகுதியில் வசித்து வரும் மூதாட்டி ஒருவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினருக்கும் இடையே, நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்துள்ளது.
இதனிடையே, சம்பவத்தன்று மூதாட்டி விருதாம்பாள் - எதிர்தரப்பு இடையே வாக்குவாதம் உண்டாகி இருக்கிறது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த எதிர்தரப்பு, மூதாட்டியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து இருக்கிறது.
இந்த விஷயத்தில் படுகாயமடைந்த மூதாட்டி விருதாம்பாள், மருத்துவ சிகிசைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
அங்கு மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத்தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
மூதாட்டியை கொலை செய்ததாக எல்லப்பன் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த கோபி கிருஷ்ணன், சுப்பிரமணி, விவேக் ஆகியோரும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: Tiruvannamalai: நர்சிங் கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்; 20 வயது இளைஞர் போக்ஸோவில் கைது.!
இதையும் படிங்க: சீட்டுக்கட்டு விளையாடச் சென்ற இடத்தில் வட்டி கேட்டு தகராறு; ரௌடி கொலை.!