×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரூ.200 வேண்டாம்., ரூ.1000 கொடு.. திருநங்கைகள் அடாவடி வழிப்பறி., புதுமணத்தம்பதிக்கு நேர்ந்த சோகம்.!

ரூ.200 வேண்டாம்., ரூ.1000 கொடு.. திருநங்கைகள் அடாவடி வழிப்பறி., புதுமணத்தம்பதிக்கு நேர்ந்த சோகம்.!

Advertisement

 

மனம்போன போக்கில் கட்டாய வசூல் வேட்டையில் இறங்கி தாக்குதல் நடத்திய 3 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.

பேருந்து & இரயில் பயணங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் கோவில் திருவிழாக்கள், பொதுஇடங்களில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்துவோருக்கு, அவர்களுக்கு யாசகம் வழங்க விரும்பும் நபர்கள் சிறுதொகையை கொடுத்துச் செல்வார்கள். இதனிடையே, இவ்வாறான பயணங்களின்போது திருநங்கைகளும் பொதுமக்களுக்கு ஆசி வழங்கிவிட்டு ரூ.10 முதல் பணம் பெற்றுச் செல்வது வழக்கம். ஒருசில இடங்களில் யாசகம் பெற வழிப்பறி போன்ற நிகழ்விலும் திருநங்கைகள் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: மூன்றாவது திருமணத்திற்கு தயாரான "அன்னபூரணி அரசு அம்மா"; இவருடன் தானாம்.. இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே?

திருநங்கைகள் வசூல்

அந்த வகையில், திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கில், திருவிழா காலங்களில் இலட்சக்கணக்கில் வரும் மக்களிடம், திருநங்கைகள் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். புதுமணத்தம்பதிகள் போன்றோரை பார்த்தால், கையில் எலுமிச்சை பழத்தை தூக்கிக்கொண்டு திருஷ்டி சுற்றி குறைந்தபட்சம் ரூ.500 முதல் பணமும் பெற்று வந்துள்ளனர். 

மோதலுக்கு வழிவகை:
திருஷ்டியே எடுக்க வேண்டாம் என கூறினாலும், அதனை கேட்காமல் திருமண கோலத்தில் வருவோரையெல்லாம் குறிவைத்து இந்த சம்பவம் நடைபெறுவது தொடர்கதையாகியுள்ளது. ஒருசிலர் அவர்களிடம் பணத்தை கொடுத்துவிட்டு அமைதியாக செல்வதும், சிலர் வாக்குவாதம் செய்வதும் நடக்கிறது. சில நேரங்களில் இவை மோதல் சம்பவத்திற்கும் வழிவகை செய்துள்ளது. 

புதுமணத்தம்பதிகள் மீது தாக்குதல்

இதனிடையே, நேற்று திருவண்ணாமலை கோவிலுக்கு வந்த புதுமணத்தம்பதிக்கு திருஷ்டி சுற்றுவதாக 3 திருநங்கைகள் சுற்றுப்போட, அவர்களுக்கு ரூ.200 கொடுக்கப்பட்டுள்ளது. 200 வேண்டாம் ரூ.500 முதல் ரூ.1000 வேண்டும் என அடாவடி செய்த திருநங்கைகள், நாக்கூசும் வார்த்தையால் புதுமணத்தம்பதியை வறுத்தெடுத்தனர். தம்பதிகள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனை கண்டு பிரச்சனையை கண்டிக்க வந்த போக்குவரத்து காவலரும் வறுத்தெடுக்கப்பட்டார்.

இந்த விஷயம் குறித்து வீடியோ வெளியாகி வைரலாகவே, காவல்துறையினர் ரீனா, தனுஷ்கா உட்பட 3 திருநங்கைகளை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: மனைவி, 6 வயது மகள் கழுத்தறுத்துக் கொலை., கணவன் நடத்திய படுபயங்கரம்.. அதிர்ந்துபோன கரூர்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tiruvannamalai #Transgender #Tiruvannamalai Temple #tamilnadu #newly married
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story