வருண்குமார் Vs நாதக பிரச்சனை உண்டாகியது எப்படி? முழு விளக்கம்.. பரபரப்பு தகவல்.!
வருண்குமார் Vs நாதக பிரச்சனை உண்டாகியது எப்படி? முழு விளக்கம்.. பரபரப்பு தகவல்.!
எனக்கும்-சீமானுக்கும், நாதக-வுக்கும் தனிப்பட்ட பகை இல்லை. ஆனால், சீமான் தலைமையிலான நாதக நிர்வாகிகள் வரம்பு மீறி செயல்பட்டதற்கு சீமான் கண்டனம் கூட தெரிவிக்காமல் பேசியது, பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட வழிவகை செய்தது என தவறுகளுக்கு உடந்தையாக இருந்ததால், கட்டாயம் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை உண்டு என வருண் குமார் ஐபிஎஸ் தெரிவித்தார்.
திருச்சி சரக டிஐஜி இன்று திருச்சி நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். திருச்சி மாவட்ட எஸ்.பியாக வருண் குமார் பணியாற்றியபோது, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலரும் குற்றவழக்கில் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக நாதக புள்ளிகள் - வருண் குமார் ஐபிஎஸ் இடையே கருத்து மோதல் நிலவியது. போலியான ட்விட்டர் கணக்குகளை கொண்டு திருச்சி எஸ்.பி வருண் குமாருக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டது. குடும்பத்தினரின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து வருண் குமார் ஐபிஎஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தார்.
இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், திருச்சி சரக டிஐஜி-யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள வன்குமார், சீமான் மற்றும் அவரின் கட்சியினருக்கு உரிய தண்டனை பெற்றுத்தரும் வரை சட்டப்போராட்டம் ஓயாது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: #Breaking: பிரிவினை வாத இயக்கமான நாதக? திருச்சி எஸ்பி வருண் குமார் பகிரங்க குற்றச்சாட்டு.!
2021ல் தொடங்கியது
இந்த விஷயம் குறித்து அவர் அளித்த பேட்டியில், "சீமான் - வருண்குமார் இடையே இருந்த பிரச்சனை தொடர்பான வழக்கு இது. கடந்த 2021 ல் திருவள்ளூர் எஸ்.பியாக நான் பணியாற்றியபோது, பாக்ஸ்கான் பிரச்சனை நடந்தது. 9000 பெண்கள் நடுவீதியில் அமர்ந்து போராட்டம் செய்தனர். சாட்டை துரைமுருகன் 9 பெண்கள் இறந்துவிட்டதாக பொய்யான வீடியோ பதிவு செய்தனர். இந்த விஷயத்தால் மிகப்பெரிய பிரச்சனை அன்று நடந்தது. இதன்பேரில் நடந்த புகாரில் வழக்குப்பதிவு செய்து துரைமுருகன் கைது செய்யப்பட்டார். நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், பத்திரிகையாளர் சந்திப்பில் என்னைப்பற்றி அவதூறாக தாக்கி பேசி இருந்தார்.
அவதூறு தாக்குதல்
சாதி ரீதியாகவும், இனவெறுப்பு எனவும் பேசினார். இது கண்டிக்கத்தக்கது. நான் எனது கடமையை செய்தேன். ஒவ்வொரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் அவரவர் பணியை செய்கிறார்கள். என்னை மிரட்டிப்பார்க்கலாம் என நினைத்தார்கள். செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் தனது கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்தால், பொறுப்பில் இருக்கும் அதிகாரியின் மீது இவ்வாறான அவதூறு தாக்குதல் நடத்துவேன் என்பதை மறைமுகமாக கூறினார். எனது மனைவி மிகப்பெரிய பலம். அவர் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளராக இருக்கிறார். எங்களுக்கே இந்த நிலை என்றால், எங்களுக்கு கீழ் இருக்கும் காவலர்களின் நிலை என்ன? தமிழகத்திலேயே இந்த இழிவான செயலை அரசியலாக சீமான் மட்டுமே செய்கிறார். சீமான் சுயமரியாதையை விட்டு செயல்படுவார் என்றால், நாங்கள் அப்படி செல்ல இயலுமா?.
படித்து பெற்ற பதவி இது
சீமானுக்கு எதிராக அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். நான் சாதாரண குடும்பத்தில் இருந்து இந்த பொறுப்புக்கு வந்துள்ளேன். எனது தாத்தா இராமநாதபுரம், திருச்சியை சேர்ந்தவர்கள். குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி. என்னைப்பார்த்து இவர் தமிழனா? இவர் தாயமொழி தமிழா? என கேட்கிறார். யாரின் தாய்மொழி என்ன என கேட்பதற்கு இவர் யார்? சட்டையை கழற்றி வா என கூறுகிறார்கள். நான் மிகவும் கஷ்டப்பட்டு படித்து இந்த பொறுப்புக்கு வந்துள்ளேன். 36 மணிநேரம் கூட யுபிஎஸ்சி தேர்வுக்காக படித்திருக்கிறேன். தவம்கிடந்து வாங்கிய பொறுப்பை, சாதரணமாக சட்டையை கழற்றி வா என கூறுகிறார். அவரின் பேச்சுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
எலி-புலி
வீட்டில் எலி வெளியே புலி என ஒரு படம் எனது சின்ன வயதில் வந்தது, சீமான் மைக் முன் புலி, பிற இடங்களில் எலி எனலாம். இவ்வுளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும், தொழிலதிபர் ஒருவரின் மூலமாக மன்னிப்பு கேட்பதாக கூறுகிறார். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பொதுவெளியில் எனது குடும்பத்தை அவதூறாக பேசி இருக்கிறார், புகைப்படத்தை மாபிங் செய்து இருக்கிறார், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அவர் பொதுவெளியில் வந்து மன்னிப்பு கேட்கட்டும். காவல் கண்காணிப்பாளரின் பொறுப்பில் இருப்பவருக்கு இந்நிலை. கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஜாமீன் எடுத்தது யார்? நாம் தமிழர் கட்சியினர் தான். மைக்கை பிடித்து பேசிவிட்டு பெண்களை அவதூறாக பேச அனுமதிக்கலாமா? பெண்களுக்கு எதிராக பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பரவாயில்லை, கட்சி தலைமை கண்டித்திருக்க வேண்டும். அதையும் செய்யமல், 30 ஆண்டுகள் கழித்து நான் ஓய்வு பெற்றதும் பார்த்துக்கொள்வதாக கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். அவர்களின் செயல்பாட்டுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்" என பேசினார்.
இதையும் படிங்க: கண்ணுல கலர், நாக்க வெட்டு.. ஏலியன் உலகமான திருச்சி?.. டாட்டூ கலைஞர் கைது.!