#JustIN: குழந்தையில்லாத ஏக்கம்; தம்பதி தற்கொலை.. வேலூரில் சோகம்.!
#JustIN: குழந்தையில்லாத ஏக்கம்; தம்பதி தற்கொலை.. வேலூரில் சோகம்.!
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, பழைய காட்பாடி பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ் (வயது 52). இவரின் மனைவி ராஜம்மாள் (வயது 45). தம்பதிகள் இருவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது.
தற்போது வரை இவர்களுக்கு குழந்தை இல்லை. குழந்தைக்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலனில்லை என கூறப்படுகிறது. இதனிடையே, தம்பதிகள் குழந்தையின்மை ஏக்கத்தால் விரக்தி அடைந்துள்ளனர்.
தம்பதி விபரீதம்
இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த தம்பதி தற்கொலை செய்துகொண்டது. காலை நீண்ட நேரம் ஆகியும் இவர்களின் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது விபரீதம் தெரியவந்தது.
இதையும் படிங்க: 17 வயது சிறுமியுடன் திருமணம், கணவன் - மனைவியாக குடித்தனம்.. சிறுவன் போக்ஸோவில் கைது..!
பின் காட்பாடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #JustIN: இருசக்கர வாகனத்தின் மீது உரசிய லாரி.. நிலைதடுமாறி விழுந்ததில் கணவர் கண்முன் மனைவி பலி.!