சிலேட்டில் எழுதி உதவிகேட்ட மக்கள்; அரகண்டநல்லூரில் பதறவைக்கும் சம்பவம்.!
சிலேட்டில் எழுதி உதவிகேட்ட மக்கள்; அரகண்டநல்லூரில் பதறவைக்கும் சம்பவம்.!
பெஞ்சல் புயலின் தாக்கத்தால் விழுப்புரம் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கெடிலம், தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆகிய ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிலேட்டில் எழுதி உதவி கேட்பு
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் பகுதியில் வசித்து வரும் மக்களில், ஒரு வீட்டின் மீது இருந்த மக்களில் சிலர், சிலேட்டில் எழுதி உதவி கேட்டுள்ளனர்.
இதையும் படிங்க: #Breaking: விழுப்புரம் - திண்டிவனம் இடையே இரயில் சேவை தொடங்கியது; இரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கம்.!
மீட்புப்படை விரைகிறது
அவர்கள் 3 பேர் என எழுதியது தெரியவந்தாலும், அடுத்ததாக அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது தெளிவாக புரியவில்லை. அவர்கள் உதவி கேட்டதால், காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலைய திக்., திக் காட்சிகள்.. புயல் மழைக்கு நடுவே தரையிறங்க முற்பட்டு, மீண்டும் பறந்த விமானம்..!